செவ்வாய், 15 ஜனவரி, 2013

தமிழின் பெருமை - அமெரிக்கப் பேராசிரியர்


தமிழின் பெருமை - பறைசாற்றும் அமெரிக்கப் பேராசிரியர் அலெக்ஸ் கொலியர்

நாங்கள் எவ்வளவதான் தமிழ்.. தமிழ்… என முழங்கினாலும் பலருக்கு நகைப்பாக இருக்கும் எதிர்த்து வாதம் செய்வார்கள். வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் வாய்பிளந்து பார்ப்பார்கள். இங்கே இந்த ஒளிப்பதிவில் அலெக்ஸ் கொலியர் சொல்வதை கேளுங்கள்.

இவர் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், இவர் தனது பட்டறையில் மற்றவர்களுக்கு விளக்குகிறார் இப்படி, ஒரு காலத்தில் உலகில் ஒரே ஒரு மொழிதான் நாம் அனைவரும் பயன்படுத்தியுள்ளோம் அந்த மொழி தமிழ் என அழகாக எழுதியும் காட்டுகின்றார்.

ஒளிப்பதிவில் 1:38.00 நிமிடத்தில் இருந்து பாருங்கள் அவரது குரலும் அவர் எழுதுவதும் தெளிவாக தெரியும்.




<object width="480" height="360"><param name="movie" value="http://www.youtube.com/v/ZegXpXm4bug?version=3&amp;hl=en_US"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/ZegXpXm4bug?version=3&amp;hl=en_US" type="application/x-shockwave-flash" width="480" height="360" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>


கரணம் தப்பினால் மரணம்.....!

இந்த படத்தை பாருங்கள்

(படம் மதிராஜ் அவர்களின் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது https://www.facebook.com/photo.php?fbid=4520325208228&set=a.2658841512299.2152650.1293732697 )
இந்த பெண்கள் எதற்காக இப்படி நிற்க வேண்டும்

பக்கவாட்டில் பாதுகாப்பு கம்பி இல்லை
முறையான படிகள்  கூட இல்லை

தகுந்த பயிற்சியுடன் சர்க்கசில் சாகசம் செய்பவர்களே கீழே பாதுகாப்பிற்கு வலை கட்டி இருக்கும் போது இந்த பெண்கள் ஏன் உயிரை பணயம் வைத்து நிற்க வேண்டும்

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் இவர்கள் என்ன செய்கிறார்கள்

தங்கள் வீட்டில் சமையலுக்கும், குடும்பத்தினர் பருகுவதற்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக இந்த அபாயங்களை தினமும் சந்திக்கிறார்கள்

இந்தியாவில் இது போல் பல ஊர்கள் இருக்கும் நிலையில் வீட்டிற்கு ஒரு அலைபேசி தேவையா என்று கேள்வி எழுகிறது

-oOo-


ஒரு அரசு என்பது எதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அதில் முதலிடம் விவசாயம், உணவு, குடி

1. நீர் மேலாண்மை, விவசாயம், உணவு, குடிநீர்
2. கல்வி சுகாதாரம்
3. சாலை, தொடர்வண்டி, மின்சாரம், தகவல் தொடர்பு
4. தொழில்
5. அரசாங்கம்
6. பாதுகாப்பு
7. கலை, விளையாட்டு

இந்த வரிசையை மாற்றி முக்கியத்துவம் அளித்த எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை (சிங்கப்பூர், துபாய் போன்ற ஊர்கள் விதிவிலக்கு)

கலையை விட பாதுகாப்பு முக்கியம்
பாதுகாப்பை விட  அரசாங்கம் நடப்பது முக்கியம்
அந்த அரசாங்கம் நடக்க தொழில் (மற்றும் அதன் மூலம் வரும் வரிகள்) முக்கியம்
அந்த தொழில் (உற்பத்தி மற்றும் சேவை) நடக்க போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு முக்கியம்
அந்த தொழில் செய்ய கல்வி , பயிற்சி முக்கியம்
அந்த மக்கள் ஆரோக்கியமாக இருப்பது அதை விட முக்கியம்
அனைத்தையும் விட முக்கியம் தினமும் உணவு வேண்டும், நீர் வேண்டும்
அதற்கு விவசாயமே அடிநாதம்

உழுதுண்டு வாழ்வார் என்று வள்ளுவர் சொன்னது இதைத்தான்